கீழக்கரையில் ரத்த தான முகாம்
First Published : 24 Jan 2011 12:08:35 PM IST
ராமநாதபுரம், ஜன. 23: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும், ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும் இணைந்து கீழக்கரையில் தன்னார்வ ரத்த தான முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜெ.எம்.ஆரிப்கான் தலைமை வகித்தார். கீழக்கரை நகர்மன்றத் தலைவர் பஷீர், ரத்த தான முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் கருப்புச்சாமி, அரசு மருத்துவர் ராஜ்மோகன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்புப் பணியினை செய்தனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.