அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Monday, November 29, 2010

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


கீழக்கரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளை சார்பாக கடந்த 25-11-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

Sunday, November 28, 2010

கூட்டு குர்பானி

கீழக்கரை TNTJ யின் குர்பான் விநியோகம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த துல் ஹஜ்ஜ் மாதத்தில் கூட்டு குர்பானி(40 ஆடுகளும் , 18 மாடுகளும் , 2 ஒட்டகமும் ) கொடுக்க பட்டது இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்டகீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழைகுடும்பங்களுக்கு குர்பான் கறி விநியோகம்செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........

வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் திரு பெயரால்
நமது TNTJ 500 கிளை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
வாராந்திர சொற்பொழிவு  நிகழ்ச்சியில் சகோதரர்
சத்தார் அவர்கள் சோதனைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

பரிசு வழங்கும் நிகழ்ச்சி


 அல்லாஹ்வின் திரு பெயரால்
நமது TNTJ 500 கிளை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
ஓதும் மாணவர்களில் சிறந்த முறையில் மனனம் மற்றும்
அழகியமுறையில் கிராத் ஓதும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
கடந்த 28  / 11 /10 அன்று நடை பெற்றது சகோதரர் சத்தார் அவர்கள் பரிசுகளை
வழங்கினார்

Saturday, November 27, 2010

ரத்த தானம்

கீழக்கரை SN  தெருவை சேர்ந்த சகோதரி
ஒருவருக்கு நமது கிளை சார்பாக O  பாசிடிவ்
ரத்தம் இரண்டு யூனிட் அர்விந்த் மருத்துவமனையில்
வைத்து கொடுக்கப்பட்டது

Thursday, November 25, 2010

மருத்துவ உதவி

கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவருக்கு
நமது 500plot  கிளை சார்பாக ருபாய் 1000 மருத்துவ உதவி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளையில் கடந்த 18-11-2010 அன்று ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.

புகார்

சமிப காலமாக கீழக்கரை 500PLOT பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது
அதை கட்டுபடுத்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயத்தை நீக்க       நமது TNTJ 500 கிளை சார்பாக
காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது அதில் தினமும் இரவில் போலிஸ் ரோந்து வர கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது அதேபோல் மின்சார வாரியத்திடமும் கரண்ட் கம்பங்களுக்கு இடையுறாக இருக்கும்
மரங்களை வெட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரியது
உதவி பொறியாளர் அவர்கள் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 
நிகழ்ச்சி 25/ 11/10 அன்று ஹுசைனியா திருமண மகாலில் நடைபெற்றது இதில் சகோதரர் 
P  ஜைனுல் ஆபிதீன் கலந்து கொண்டு இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கும்
தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிரான குற்ற சாட்டுகளுக்கும் பதில்  அளித்தார் இந்நிகழ்ச்சியில்
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

Sunday, November 21, 2010

மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ,கீழக்கரை 500 பிளாட் TNTJ கிளை மூலம் தேவிபட்டினத்தைச் சார்ந்த சகோ:பால முருகன் என்பவரின் மருத்துவ செலவிற்காக  ரூபாய் : 3000 மருத்துவ உதவியாக மாவட்டத் தலைமையில் கடந்த 08.11.10 அன்று வழங்கப்பட்டது....

Thursday, November 11, 2010

கீழக்கரையில் ஹஜ்ஜு பெருநாள் அறிவுப்பு

கீழக்கரையில் ஹஜ்ஜு பெருநாள் அறிவுப்பு
இன்ஷா அல்லா வருகின்ற ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்பு
ப்ளெக்ஸ் போர்டு மனோ இச்சை படி இல்லாமல் மார்க்கம் காட்டும் வழியில்
அழைக்கிறது

Friday, November 5, 2010

தொடங்கியது பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்ட அறிவிப்பு

அல்லாஹ்வின் திரு பெயரால்
பல வருட போராட்டத்தை கேள்விக்குறியாக்கிய நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும்
இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட கோரி இன்ஷா அல்லாஹ் ஜனவரி 4 அன்று  மதுரையை
மனித வெள்ளத்தில் மூழ்கடிக்க ஆர்பரித்து வாருங்கள் என்று போர் முரசு கொட்டும்
சுவர் விளம்பரங்கள் எழுதும் பணி ஆரம்பம் இன்ஷா அல்லாஹ் போட்டோக்கள்  விரைவில்

ஜும் ஆ உரை

நமது TNTJ 500plot கிளை மஸ்ஜிது த்தக்வவில் 05/ 11/  வெள்ளி  மேடையில்
சேலம் தவ்ஹீத் கல்லூரியின் மாணவர் சகோதரர் ஜாகிர் அவர்கள்
அல்லாஹ்வின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்லாஹ்வுக்கே எல்ல புகழும்

Wednesday, November 3, 2010

மருத்துவ உதவி

நமது TNTJ 500plot கிளை சார்பாக கீழக்கரையை சேர்ந்த ஏழை
சகோதரர் மண்ணீரல் சம்பந்தமான நோயால் அவதி பட்டு
மருத்துவ செலவிற்காக நம்மை நாடினார் மாவட்ட தலைமையும்
500plot  கிளையும் இணைந்து ருபாய் 5100 வழங்கப்பட்டது அல்லாஹ்வுக்கே
எல்ல புகழும்
Related Posts Plugin for WordPress, Blogger...