அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Friday, December 31, 2010

* விவாத இடைவேளையின் போது ஜமாலியும் அவரது சகாக்களும்

Sunday, October 31, 2010

* விவாத இடைவேளையின் போது ஜமாலியும் அவரது சகாக்களும்…..


Sunday, October 31, 2010 | 

ஜமாலி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறார்.....
சு.ஜ- (சு.ஜ. என்றால் சுன்னத் ஜமாஅத் உறுப்பினர் என்று அர்த்தம்) ஏன் அலறீங்க ஜமாலி சாஹிப்?


ஜமாலி: வீணா போய் விவாதத்துக்கு சவால் விட்டு இப்பிடி வாங்கிக்கட்டிக்கொண்டேனே..... ஹய்யோ இப்பிடி அவமானப்படுத்திட்டான்களே...ஊ..ஓ..ஓ


சு.ஜ.- சரி விடுங்க சாப் இதெல்லாம் நமக்கு பழக்கப்பட்டதுதானே. என்ன இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே அவமானமாப்போச்சு.. என்ன பண்றது. இதுக்கெல்லாம் கலங்கினா எப்பிடி. நம்மள அப்துல் காதர் ஜெய்லானி காப்பாத்துவார்.


ஜமாலி: முதல்ல மெதுவாத்தான் ஆரம்பிச்சாங்க. ஆனால் நம்ம வீடியோவ போட்டு நமக்கே ஆப்பு அடிப்பானுகன்னு நெனக்கிலையே. அடுத்த ஜும்மாவுலையே இனிமே வீடியோ எடுக்கறதே ஹராம்னு பத்வா கொடுக்கணும்.



சு.ஜ- ஐயோ அதுக்கு ஆதாரம் கேட்டாங்கன்னா..?!

ஜமாலி: யாராவது ரஹ்மதுல்லாஹி அலைஹி சொன்னாங்கன்னு சொல்லிட வேண்டியதுதான் இல்லேன்னா. ரசூலுல்லா கூறியுள்ளார்கள் என்று சொல்லிட வேண்டியதுதான்.


சு.ஜ.- எடுத்துக்காட்ட சொன்னா?

ஜமாலி: நான் எல்லாம் விவாதத்துலையே போய் 'மிருகத்துடன் புனர்ந்தவனுக்கு தண்டனை இல்லன்னு' ரசூலுல்லாஹ் சொன்னாங்கன்னு திர்மிதில இருக்குன்னு அடிச்சு விட்ட ஆளு. எடுத்துக்காட்ட சொல்லி கேட்டும் எடுத்துக்காட்டல. அதையே யோசிக்காத நம்ம ஆளுங்க. இதையா யோசிக்கபோரானுங்க ?


சு.ஜ.- அதுவும் சரிதான் ஆமா மத்ஹப்ல இருந்து அவ்ளோ ஆபாசங்கள அள்ளிப்போட்டான்களே ஏன் ஒன்னக்கூட நீங்க கண்டுக்கல? அதுல ரொம்ப அவமானமாப்போச்சே வழக்கம்போல ஏதாவது உளறியாவது இருக்கலாமே


ஜமாலி- அது கூட்டத்துல ஒருத்தன் என்னைப்பார்த்து சொன்னான் 'டேய் இந்தாளு எவ்வளவு அவமானப்பட்டாலும் தாங்குறான்யாஇ இவன் ரொம்ப நல்லவேன்னு' சொல்லிட்டான்..(ஓ ஓஒ ஊ ..ஓ கூட்டமே சேர்ந்து அழுவுது)


சு.ஜ.- களியக்காவிளையில் செஞ்ச மாதிரி கிதாப வாசிச்சு காட்டி கிதாப தாங்கன்னு கேட்டு கடைசி வரைக்கும் திறந்தே பார்க்காம இருந்திருக்கலாமே?

ஜமாலி- எத்தனை நாளைக்கித்தான் ஒரே மாதிரி ஏமாத்துறது. அதுபோக இந்த முறை அந்த மாதிரி படத்த ஓட்ட முடியல ஏன்னா கிதாப மூலத்தோட படம் போட்டு காட்டிட்டாணுக. நானும் எவ்வளவு நேரத்துக்குதான் கண்டுக்காத மாதிரியே நடிக்கிறது. கடைசியா ஒரு ஹதீசக்கூட இட்டுக்கட்டிப் பார்த்தேன். அதையும் கண்டுபுடிச்சிட்டாங்க அந்த வஹாபிக்கூட்டம்


சு.ஜ.- சரி விடுங்க இன்னும் கொஞ்சம் விவாதம் மிச்சமிருக்கே எப்பிடி சமாளிக்கப் போறீங்க..?


ஜமாலி- அதான் நான் கண்டுபுடிச்ச பயங்கரமான பிழைகள் இருக்கே நசாயிய நசயின்னு போட்டது ஏன்? அப்படின்னு கேட்டுக்குட்டே இருப்பேன்


சு.ஜ.- அதுக்குத்தான் பதில் சொல்லிட்டாங்களே மறுபடியுமா?


ஜமாலி- அதெல்லாம் நம்ம ஆளுங்க மறந்துடுவாங்கய்யா நம்ம கேட்டுகிட்டே இருப்போம்இ அத உட்டா நமக்கு வேற வழியும் இல்ல..


சு.ஜ.- நம்ம ஆளுங்கல்ல கொஞ்சம் மூளை இருக்குற யாராவது யோசிக்க ஆரம்பிச்சுட்டா?


ஜமாலி: விடுவேனா நான் உடனே ஒரு கூட்டத்த போட்டு சுன்னத் ஜாமத் மாபெரும் வெற்றி! மீண்டும் வெற்றி! அப்பிடி ஏதாவது டயலாக்க விட்டு இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹுவை காபிர் என்கிறான் இந்த வஹாபிஇ பிர்அவ்ன் ரஹ்மாதுல்லாஹி அலைஹியை காபிர் என்று சொல்லிவிட்டான்னு கூவினா சரியாப்போயிடும் அதுக்கப்புறம் யோசிக்கவே மாட்டானுக.

சு.ஜ.- அதுசரி அதத்தான் கடந்த காலங்களிலும் நாம செஞ்சோம்இ களியக்காவிளையிலும்அந்த மாதிரி ஒரு மாநாடு போட்டு கன்னாபின்னான்னு திட்டிப்புட்டோமுள்ள இந்த முறையும் அதே மாதிரி செஞ்சிடலாம்..ஆமா ஒரு சந்தேகம் பிர்அவ்ன் காபிர்னு குரான்ல ஆல்லாஹ்வே சொல்றானே..?


ஜமாலி- நமக்கு அதுவா முக்கியம் அதுக்கு இப்னு அரபி (ரலி) குடுத்திருக்கும் விளக்கம்தான் முக்கியம்இ அல்லாஹ் இப்பிடித்தான் ஏதாவது சொல்லுவான்இ அத விளங்கும் அளவுக்கு நமக்கு மூளையேதுஇநமக்கு முக்கியம் இமாம்கள் கொடுக்கும் விளக்கம்தான் முக்கியம் நம்ம அதுக்குத்தான் வக்காலத்து வாங்கணும் அது ஏறுக்கு மாறாக இருந்தாலும் சரிதான்.


சு.ஜ.- சரி சரி விவாதம் ஆரம்பிச்சிருச்சு போய் ஏதாவது பேசுங்க


ஜமாலி- அப்பிடியா இதோ வந்துட்டேன்....அன்பானவர்களே, தொடையை காட்டச்சொல்கிரார்கள் இவர்கள், இரண்டு குடும்பம் ஒன்றாக சேர்ந்து சாப்பிடலாம் என்கிறார்கள், நசாயியை நசயி என்கிறார்கள், ஆபாசத்தை தூண்டுகிறார்கள்.........................................................................................



நன்றி - கடையநல்லூர் அக்ஸா

இலவச கலர் டிவி


மது கீழக்கரையில் இலவச கலர் டிவி வழங்கப்பட்டு வருகிறது
இதில் முறைகேடு நடப்பதாகவும் குறிப்பிட்ட ரேசன் காடுகளுக்கு மட்டும்
டிவி கொடுப்பதாக புகார்கள் நமது ஜமாஅத்திற்கு நவந்த வண்ணம் இருந்தன
நகராட்சி  அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டு இருந்தது 
குறை நிவர்த்தி செய்ய படாத நிலையில் அடுத்த கட்ட போராட்டதிற்கு
ஆலோசனை செய்யப்பட்டநிலையில்
பெரியபட்டினம் விபத்து மற்றும்
 மாவட்ட பொதுக்குழு போன்றவையால் கொஞ்சம்
நிறுத்தி வைக்கபட்டிருந்தநிலையில்
தாசில்தார் தலைமையில் ஆலோசனை கூட்டத்தை
31 /12 10  அன்று அரசு ஏற்பாடு செய்து TNTJ  மற்றும் பல
அமைபுகளை அழைத்து இருந்ததது தற்போது கைவசம் இருக்கும்
1500  டிவி களை  கொள்ளுமாறும் மேலும் 3000  டிவி வந்தவுடன்
விட்டு போனவர்களுக்கு வழங்கபடும் என்றும் தெரிவித்தார்
நமதுTNTJ 
 நிர்வாகிகள்  மீதி 3000 ம் டிவி வந்த பிறகு மொத்தமாக அனைவருக்கும்
கொடுங்கள் என்றும் முறைகேடுகள் செய்தவர்கள் மீது
நடவடிக்கை பொதுமக்களை அவமரியாதை செய்து அலையவிடுபவர்கள்
மீது நடவடிக்கையும் வரும் ஜனவரி 10 க்குள் அனைவருக்கும்
டிவி வழங்காவிட்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுமக்களை
ஒன்று திரட்டி போராட்டத்தில் குதிக்கும் என்பதை நமது நிர்வாகிகள்
ஆணித்தரமாக தெரிவித்து உள்ளார்கள்


ஜும்ஆ

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ  500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
31 /12 /10 வெள்ளிகிழமை அன்று  சகோதரர்
செய்யதுஜிப்ரீல் (TNTJஇராமநாத புரம் மாவட்ட ஏகத்துவ அழைப்பாளர் )
அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில்ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்
மரணம் என்ற வார்த்தையை கேட்ட உடன் மனிதன் வெருண்டு ஓடுவதையும்
மரண சிந்தனை ஏதும் இல்லாமல் அவன் தான் தோன்றி தனமாக திரிவதையும்
அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
பொன் மொழிகளோடும் இன்றைய எதார்த்தமான சூழ்நிலையையும் படம்
பிடித்து காட்டுவதுபோல் விளக்கினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, December 30, 2010

தவ்ஹீத் புத்தகங்கள் விற்பனைக்கு

அல்லாஹ்வின் திருப்பெயரால்
தவ்ஹீத் புத்தகங்கள் விற்பனைக்கு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரையில்
தவ்ஹீத் வளர்ச்சியின் காரணமாக மக்கள் தவ்ஹீத் சிந்தனைகள்
நிறைந்த புத்தகங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்ட காரணத்தால்
அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை நகர் கிளை
சார்பாக வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும்
சிங்கபூர் பேன்சி ஸ்டோரில் ஒரு பகுதியை தவ்ஹீத் புக் சென்டராக
மாற்றயுள்ளனர் இங்கு தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடான  ஏகத்துவம்
தீன் குல பெண்மணி  உணர்வு மற்றும் மார்க்க அறிஞர்களின் குறுந்தகடுகள்
சகோதரர் PJ  அவர்கள் மொழி பெயர்த்த குர்ஆன் தர்ஜுமா மற்றும் புத்தகங்கள்
தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது தெருமுனை பிரச்சாரம்
நோட்டீஸ்கள் இறை வசனம் தாங்கிய போஸ்டர்கள் அறைகூவல் விடுக்கும்
விளம்பர பலகைகள் சுவர் விளம்பரங்கள் தனி சானலில் தவ்ஹீத் டிவி என
தவ்ஹீத் பிரச்சாரம் கீழக்கரை முழுவதும் முடிக்கிவிடபட்டுள்ளது
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 28, 2010

பெரியபட்டிணம் படகு விபத்து”


முஸ்லிம்கள் 15 பேர் பலி – விபத்திற்கு அரசே பெரியபட்டிணம் படகு விபத்து” பொறுப்பு!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 28, 2010, 16:45
சோகத்தில் குடும்பத்தினர்! – ஆத்திரத்தில் ஊர் மக்கள்!
இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டிணத்தைச் சேர்ந்த 15 முஸ்லிம்கள் படகு விபத்தில் நீரில் மூழ்கி இறந்தனர். பெரியபட்டிணத்தைச் சேர்ந்த அப்துல் குத்தூஸ் என்பவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். விடுமுறையில் ஊர் வந்த அவரும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் கடந்த 26.12.10 ஞாயிரன்று அருகில் உள்ள ”அப்பா தீவு” என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
ஒரு படகில் ஆண்களும், மற்றொரு படகில் பெண்களுமாக இரண்டு படகில் பயணித்த போது, பெண்கள் சென்ற படகு எதிர்காற்று பலமாக அடித்ததன் காரணமாக குலுங்க ஆரம்பித்துள்ளது. அதிலிருந்த பெண்கள் பயத்தின் காரணமாக ஒரு பக்கமாக ஒதுங்க படகு நீரில் மூழ்கியது. படகில் இருந்த 35 பெண்களும் நீரில் மூழ்கினர்.
அருகில் பயணித்துக் கொண்டிருந்த படகில் இருந்த ஆண்கள் உடனே ஊரில் இருந்த சகோதரர்களுக்கு தகவல் தெரிவிக்க, விபத்து செய்தி ஊர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது,
26.12.10 அன்று நடக்க இருந்த இராமநாதபுர மாவட்ட பொதுக்குழுவுக்கு கிளம்பிக் கொண்டிருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சகோதரர்களுக்கும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் சகோதரர்களும் அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த முத்துக்குளிக்கும் நபர்களோடு இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
அத்தோடு மட்டுமில்லாமல், விபத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களைக் கொண்டு செல்வதற்கும், மேலும் மீட்கப்பட்ட சகோதரிகளை மருத்துவமனை கொண்டு செல்வதற்கும் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
அரசின் மெத்தனப்போக்கு:
படகு பயணித்த கடல்பகுதி பயணம் செய்ய தடைசெய்யப்பட்ட பகுதியாகும். அந்த பகுதியில் பவளப்பாறைகள் உள்ளதால் மீன்பிடிப்பதற்கும், மீனவர்கள் செல்வதற்கும் கூட தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட பகுதியில் இவர்கள் பயணம் செய்ததை அரசு எந்திரங்கள் கண்டுகொள்ளாததே இந்த விபத்திற்கு முழுமுதற்காரணமாகும்.
கடலோரகாவல்படையினர்கள் எத்தனையோ பேர் இருந்த நிலையிலும், அரசின் மெத்தனப்போக்கும், கையாலாகாத தனமும் தான் இந்த விபத்திற்கு காரணமாதலால் இதற்கு அரசே முழுபொறுப்பேர்க்க வேண்டும்.
அத்தோடுமட்டுமில்லாம்மல், ஒரு படகில் பயணம் செய்வதாக இருந்தால் அந்த படகு மூழ்கும் நிலை ஏற்பட்டால் முதலுதவிக்கு உயிர்காக்கக்கூடிய வகையில் தரப்படும், உயிர்காக்கும் மிதவை அங்கி (life jacket) படகில் இருப்பது உட்பட, இத்தனை பேரைத்தான் ஏற்ற வேண்டும் என்ற அளவுகளோடு உள்ள எந்தவிதிமுறைகளையும் எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாதது இவர்களது கையாலாகாத தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
சில வருடங்களுக்கு முன்னால் தேக்கடியில் இது போன்று படகில் பயணித்தவர்கள் விபத்துக்குள்ளானது எத்தகைய விதிமுறைமீறல்களால் ஏற்பட்டது என்பதும் அரசாங்கத்திற்கு தெரியாமலில்லை.
ஒன்றுக்கும் உதவாத அரசு எந்திரங்கள்:
நீரில்மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்ட சில சகோதரிகளை மீட்டெடுத்து பெரியபட்டிணத்தில் உள்ள அரசுமருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு மருத்துவர்கள் ஏதும் இல்லாதிருந்ததன் காரணமாக காப்பாற்றப்பட வேண்டிய விலைமதிப்பற்ற மனித உயிர்கள் மரணிக்க நேர்ந்தது.
அவசர உதவிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்திருந்து முதலுதவி செய்திருந்தால் இன்னும் சில உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
மேலும், அருகிலிருந்த காவல்துறை வாகனங்களும், கப்பற்படைக்குச் சொந்தமான வாகனங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வராததால் பொதுமக்கள் கடும் ஆத்திரத்திற்குள்ளாயினர். ஒரு புறம் பொதுமக்கள் நீரில்மூழ்கியவர்களை வெளியிலெடுத்து காப்பாற்றி முதலுதவி செய்ய, மறுபுறம் ஊருக்கு வெளியிலிருந்த கப்பற்படையினர் தாங்கள் தான் மீட்புப்பணியில் ஈடுபட்டோம் என்று பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தந்தது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போன்று இருந்தது.
ஆபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் தங்களது வாகனங்களை உதவி செய்வதற்கு பயன்படுத்த மறுத்தவர்களையும், சரியாக விசாரிக்காமல் தவறான தகவல்களை வெளியிட்ட பத்திரிக்கைகள் மீது ஊர்மக்கள் ஆத்திரம் அடைந்ததோடு, மறுநாள் தகவல் சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களையும் ஊர் மக்கள் விரட்டியடித்தனர்.
சடலங்களை ஏற்ற மறுத்த 108 ஆம்புலன்ஸ்:
அவசரத்திற்கு உதவ வேண்டிய தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு தொலைபேசியில் அழைப்பு கொடுத்த போது இறந்த சடலங்களை நாங்கள் ஏற்ற மாட்டோம் என்று அவர்கள் கூறியதற்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
108 ஆம்புலன்ஸ் இறந்த சடலங்களை ஏற்ற அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த ஊர் பொதுமக்களால் முன் வைக்கப்பட்டது.
விபத்தை தடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் அரசாங்கம், பொதுமக்களது உயிர்களுக்கு பாதுகாப்புத்தரவேண்டிய அரசு எந்திரங்கள், கையாலாக தனமாக இருந்துவிட்டு, தற்போது தங்களது கையாலாகாதனத்தை மறைப்பதற்கு இறந்தவர்களுக்கு ஒரு இலட்சம் அறிவித்துள்ளது. எத்தனை லட்சங்களை இழப்பீட்டுத்தொகையாக இவர்கள் அறிவித்தாலும் இவர்களது கையாலாகாதனத்தையும் அலட்சியப்போக்கையும் மறைப்பதற்கு இந்த லட்சங்கள் உதவாது என்பதை பதிவுசெய்கின்றோம்.

Friday, December 24, 2010

ஜும் ஆ உரை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ  500plot  கிளை மஸ்ஜித் தக்வாவில்
சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி
(TNTJ  மாநில தலைவர் )அவர்கள் ஜும் ஆ
உரை நிகழ்த்தினார்கள் பொருளாதாரம் என்ற
தலைப்பில் பேசிய அவர் ஹலால் அல்லாத வழியில்
பொருளாதாரம் வந்தால் அது எவ்வளவு பெரிய
வழிகேட்டில் விடும் என்பதையும் வணக்கத்தில் சிறந்த
வணக்கமான பிரார்த்தனையை இறைவனிடம் நெருங்க விடாமல்
செய்துவிடும் என்பதை அல்லாஹ்வின் வேத வசனங்களோடும்
அல்லாஹ்வின் தூதர் அழகிய முன் மாதிரியான நபிகள் நாயகம் (ஸல் )
அவர்களின் வாழ்க்கை வரலாறில் இருந்தும் மிக தெளிவாகவும்
எளிமையாகவும் விளக்கினார்ர்கள் ஏரளாமான மக்கள் வந்திருந்ததால்
அவர்களுக்கு பள்ளிக்கு வெளியே தார்பாய் விரித்து
தொழுவதற்கு வசதி செய்யப்பட்டது
நாலு பேரை வைத்துகொண்டு தேசியததலைவர் என்றும்
மனிதநேய மிக்க மாபெரும் மாமனிதர்கள் என்றும் பெருமையடிப்பவர்கள்
உண்மையான மனிதநேயம் மிக்க மாபெரும் மாமனிதரான
நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் வாழ்க்கை நெறிமுறையை ஒருமுறை
படித்தால் ?படித்தால் யாருக்கு தெரியும்  படித்தாலும் ?
இப்படிதான் இருப்பார்கள் ஏன் என்றால் ஏற்கானவே கொஞ்சம்
படித்துவிட்டு தானே இப்படி புலம்பிகொண்டு இருக்கிறார்கள்

Thursday, December 23, 2010

அறைகூவல் விடுக்கும் சுவரொட்டிகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
26/12 /2010  அன்று தேவி பட்டினத்தில் நடக்கும் சமுதாய எழுச்சி
மாநாடு  மற்றும் கிழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
500plot  கிளையில் சகோதரர் அல்தாபி ஜும் ஆ  உரைக்கு
அழைப்பு விடுக்கும் போஸ்டர்களும் கீழக்கரையில் தற்போது
நடைபெற்று வரும் ஆடம்பரம் மற்றும் அனாச்சாரமான
முற்றிலும் நபி (ஸல் )அவர்களின் வழிகாட்டுதலுக்கு எதிரான
திருமண திரு விழாக்களை புறக்கணிக்க சொல்லும் போஸ்டர்களும்
கிழக்கரை முழுவதும் ஒட்டப்பட்டன பணத்துக்கும் பகட்டுக்கும் புகழ்ச்சிக்கும்
தன்மானத்தை தட்டில் வைத்து விலைபேசி கூழை கும்பிடு 
போட்டு
பிழைப்பு நடத்தும் கோழைகளுக்கு மத்தியில் சத்தியத்தை சத்தியமாக சொல்லும்
எவருக்கும் எதுக்கும் அஞ்சாமல் யாருக்கும் விலை போகாமல் அல்லாஹ்
ஒருவனே அச்சபடுவதர்க்கும் எங்களை பாதுகாப்பதற்கும் போதுமானவன்
நபி வழியே நமது வழி நபி வழியை புறக்கணிப்போரை நாமும் புறக்கணிப்போம்
என்று அறைகூவல் விடுக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன
அல்ஹம்துலில்லாஹ்
இந்த போஸ்டர்களை கூலிக்கு மாரடிக்கும் கையால்லாகாத
கைக்கூலிகளும் பொய்யன் ஜமாஅத்தை சேர்ந்த பொய்யர்களும்
மறைத்து போஸ்டர் ஒட்டவும் கிழித்து போடவும் செய்தன
கிழிப்பதன்னாலும் மறைப்பைதனாலும் எலும்புகளை வீசும் எஜமானர்களுக்கு
விசுவாசம் காட்ட முடியுமே தவிர சத்தியத்தை 
எதுவும்  செய்ய முடியாது 
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர்
(தன்னை )மறுப்போர் வெறுத்தபோதிலும்அல்லாஹ் தனது ஒளியை முழுமை படுத்தாமல்
 விடமாட்டான் திருக்குர்ஆன் 9 :32  

வெளிச்சம் * உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?.

அஸ்ஸலாமு அலைக்கும்,,,
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை நம் கைகளிலேயே தவழ்ந்து கொண்டிருக்கும் செல்போன்களின் தரத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?இதற்காக சர்வீஸ் இன்ஜினியர்கள் அல்லது நிபுணர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை. உங்கள் செல்போன்களின் தரத்தை நீங்களே எளிதாக சரிபார்க்கலாம். 
உங்கள் செல்போனில் *#06# என்று அழுத்தவும். உடனடியாக செல்போன் திரையில்15 இலக்கங்களில் IEMIஅடையாள எண்கள் தெரியவரும். அந்த எண்களில் 7மற்றும் 8வதாக உள்ள எண்களை கீழ்க்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்துஉங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
தற்போதுஅதிகாரப்பூர்வமாக ஐ.எம்.இ.ஐ. இல்லாத செல்பேசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்பேசி கருவி அடையாள எண்) எண் இருக்கும்.. எனவே இந்த ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளை ஒருவர் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடியாது. திருடு போனாலும் கண்டுபிடிக்க இயலாது. உங்கள் செல்பேசியின் இதனை சாதகமாக்கி தீவிரவாதிகளும்குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் செல்பேசியின் IEMI ASஎண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் திருட்டு போய் விட்டால் காவல் துறையில் புகார் செய்து உங்கள் செல் எங்கிருந்தாலும் கண்டு பிடித்து விடலாம். (காவல் துறை ஒழுங்காக செயல் பட்டால்)  
·         மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால்: தரமான தொழிற்சாலையில் தயாரித்தது. அத்துடன் முழுக்க சோதிக்கப்பட்ட முதல் தரம் வாய்ந்தது.
·         மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால்: தரமான செல்போன். சோதிக்கப்பட்டது.
·         மற்றும் 8வது எண் 03அல்லது 30 என்றிருந்தால்: தரமான செல்போன். சோதிக்கப்பட்டது.
·         மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால்: தரம் சுமாராகத்தான் இருக்கும்.
·         மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால்: துபாயில் அசெம்பிள் செய்த செல்போன். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும்.
·         மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால்: தரம் குறைந்த பொருள். மின் இணைப்பு கொடுக்கும் போது (சார்ஜ் செய்யும் போது) வெடிக்க நேரிடும். அல்லாஹ் நாடினால் .

-- 
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71
 

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
22 /12 /2010  அன்று கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த
சகோதரர் ஒருவருக்கு நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
500plot  கிளை சார்பாக B பாசிடிவ் ரத்தம் ஒரு unit வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 21, 2010

வாரி வழங்கிய வள்ளல்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
வாரி வழங்கிய வள்ளல்கள்
கீழக்கரையில் முழு நேர ஏகத்துவ
பிரச்சாரத்திற்கு உதவி கொண்டிருக்கும்
TNTJ  டிவி சானலை  மேலும் மெருகூட்டவும்
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 27
பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்திற்கும்
தனது நகையை ஒரு சகோதரி வாரி வழங்கினார்கள்
அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்
நற்கூலியை வாரி வழங்க துவ ஆ செய்யுங்கள் இது போல்
நமது ஜமாஅத்தின் மீது நம்பிக்கை வைத்து வாரி வழங்கும்
மற்றும் வாரிவழங்க நினைக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
துவ ஆ செய்யுங்கள்

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  500plot கிளை
சார்பாக கீழக்கரை sn  தெருவை சேர்ந்த சகோதரர்
ஒருவருக்கு O நெகடிவ்  ரத்தம் ஒரு unit  வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, December 18, 2010

போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்துஜனவரி 4ல் அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, December 17, 2010

சிறு தொழில் உதவி

அல்லாஹ்வின் திருபெயரால்.....
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot
கிளை சார்பாக சாலை தெருவை சேர்ந்த சகோதரி
ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிசின்
வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

ஜும் ஆ உரை

அல்லாஹ்வின் திருபெயரால்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot
கிளை மஸ்ஜிது தக்வாவில் சகோதரர் இம்ரான் அவர்கள் ஜும்ஆ
உரையாற்றினார்கள்  மறைந்து போன மனித நேயம் என்ற தலைப்பில்
நம் சமுதாயம் மனித நேயத்தை தொலைத்துவிட்டு நிற்பதையும்
இஸ்லாம் எந்த அளவுக்கு மனித நேயத்தை வலியுறுத்துகிறது என்பதையும்
விளக்கினார்கள் தன் வீட்டு கல்யாணத்திற்காக சாலை போடுவதையும்
மாடமாளிகைகள் நிறைந்த இந்த ஊரில் தனது இயற்க்கை தேவையை
கழிப்பதற்கு பக்கத்து வீட்டுக்கு போகும் அவலத்தையும் அடிப்படை வசதி கூட
இல்லாத நம் சமுதாய மக்கள் இங்கே இருப்பதையும்  சுட்டி காட்டினார்கள்

Wednesday, December 15, 2010

கீழக்கரை கிளைகள் சார்பாக இந்த வருடம் காலண்டர் அடிக்கப்பட்டுள்ளது

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருபெயரால்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை
கிளைகள் சார்பாக சாயல்குடியை  சேர்ந்த
சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக
5000 ருபாய் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 14, 2010

இஸ்லாமிக் கல்லூரி

இன்ஷா அல்லாஹ் வரும் 07 /01 /2011
அன்று கீழக்கரையில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக " ஷர ஹுல் ஹிக்மா பெண்கள் தவ்ஹீத் கல்லூரி
தொடங்க இருக்கிறது அதற்க்கான மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது
இக் கல்லூரியில் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடம் ஆலிமா பயிற்சியும்
தாய்மார்களுக்காக ஆறுமாத பயிற்சியும் நடைபெற உள்ளது இது பற்றி  நகர்
TNTJ  செயலாளர்  சகோதரர் அஸ்கர் அலி கூறியதாவது இப்பயிற்சி போக
மேலும் ஆங்கில பேச்சு பயிற்சி  கம்ப்யுட்டர் அடிப்படை  பயிற்சி
பேச்சு திறன் பயிற்சி போன்ற முக்கியமான பயிற்சிகளும் வழங்கபடுவதாகவும்
இக் கல்லூரிக்கு வரும் மாணவியர்களுக்கு இலவச வாகன வசதியும்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இக்கல்லூரியை ஆய்ஷா பீவி தவ்ஹீத் மதரசாவில்
வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது கல்லூரியின் நிறுவனரும் மூத்த
தவ்ஹீத்வாதியுமான ஆய்ஷாஉம்மா அவர்கள் தனது சொந்த பொறுப்பில் நடத்த உள்ளார்கள்

மருத்துவ உதவி

நமது tntj500plot கிளை சார்பாக ராமநாதபுரத்தை
சேர்ந்த மாற்று மத சகோதரர் ஒருவருக்கு O +
ரத்தம் ஒரு unit வழங்கப்பட்டது

Saturday, December 11, 2010

ஆஷுரா தினம்

காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்"! (அல்குர்ஆன் 9:36)

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத் திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன.

நபி மூஸா(அலை) அவர்கள், அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிபெற்று கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட தினமான ஆஷுரா தினத்தை ஒரு சாரார் களங்கப்படுத்தி அதை துக்கமிக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

அலீ(ரலி) அவர்களை தூதராக ஏற்றுக் கொண்ட ஷியா கூட்டத்தினர், அலீ(ரலி) அவர்களின் மகனார் ஹூஸைன்(ரலி) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளில் கொல்லப்பட்டார்கள் என்றும், அதற்காக துக்கம் அனுஷ்டிப்பதாகக் கூறி நெஞ்சில் அடித்துக் கொள்வது, ஒப்பாரி வைப்பது, ஊர்வலம் நடத்துவது, தீக்குண்டத்தை வலம் வருவது என்பன போன்ற வீணான காரியங்களை இஸ்லாத்தின் பெயரால் செய்து வருகின்றனர்.இவ்வாறு செய்வது பெரிய பாவமாகும். அது மட்டுமின்றி, எந்த ஒரு முஸ்லிமும் இப்படிச் செய்யக்கூடாது.
இது போன்று செய்தால் அவன் முஸ்லிம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்... “கன்னத்தில் அடித்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துக்கொண்டு, அறியாமைக் காலத்து ஒப்பாரி வைப்பவன் என்னைச் சார்ந்தவனில்லை. அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1294, முஸ்லிம் 148, திர்மிதி 920, நஸயி 1827

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால்,துக்கம் என்ற பெயரில் மார்பில் அடித்துக் கொள்ளும் இந்த ஷியாக் கூட்டத்தினரின் செயலை சிலர் முஸ்லிம்கள் பெரிய சாதனையை செய்து விட்டதைப்போல் ரசிக்கின்றனர். அங்கே ஒன்று கூடுகின்றனர். ஆனால் இது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை யார் செய்தாலும் அதை தடுக்க வேண்டும். அதற்கு சக்தியில்லையென்றால் இஸ்லாத்திற்கே கேவலம் ஏற்படுத்தும் இவர்களின் காரியங்களை பார்த்து வேதனைப்பட்டு ஒதுங்கி விட வேண்டும்.

ஏனெனில்,
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...(கவலையின் போது) ஒப்பாரி வைப்பவனையும், தலையைமழித்துக் கொள்பவனையும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டு விலகிக் கொண்டேன் அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: முஸ்லிம் 149

இவர்கள்தான் இப்படியென்றால், தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் சிலரது காரியங்கள் இன்னும் படுமோசமாக இருக்கிறது. முஹர்ரம் பத்தாம் நாள் வந்த உடனேயே பஞ்சா எடுப்பது (ஐந்து விரல்களில் படும் அளவிற்கு மஞ்சளைக் கையால் தட்டி வீட்டுக் கதவுகளில் அப்புவது), ஹுஸைனார் பெயரில் மவ்லித் ஓதுவது, பத்தாம் நாளில் மட்டும் நோன்பு நோற்று யூதர்கள் வழியைப் பின்பற்றுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதுவெல்லாம் நபிகளாரின் வழிமுறைகளல்ல. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ ஸஹாபாக்கள் ஷஹீதானார்கள். ஸஹாபியப் பெண்கள் இறந்துள்ளார்கள். இவ்வளவு ஏன்? நபி(ஸல்) அவர்களுடைய பாசத்துக்குரிய மனைவி கதீஜா(ரலி) அவர்களும் இறந்துள்ளார்கள். இதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்தார்களா? நெஞ்சில் அடித்துக் கொண்டார்களா? சட்டையைக் கிழித்துக் கொண்டார்களா? தீக்குண்டத்தை சுற்றி வந்தார்களா? மொட்டையடித்துக் கொண்டார்களா? ஹுஸைனார் மவ்லித் ஒதினார்களா? இல்லவே இல்லை. நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டாத தடுத்துள்ள இந்த அனாச்சாரங்களை நாம் ஏன் செய்ய வேண்டும். இதனால் நன்மை கிடைக்குமென்றா? இல்லையே!. இது போன்ற காரியங்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள் என்றே நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புதிய அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் (தள்ளி) விடும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயி 1560

மேலும் ஆஷுரா தினம் என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி சிறப்பு தினமாக கருதப்பட்டு வந்தது என்பதையும் விளங்க வேண்டும். ஏனெனில் சிறப்பு என்று எண்ணி நம் சமுதாயத்தினர் தவறான காரியங்களை செய்து வருகின்றனர்.முஹர்ரம் பத்தில் மேற்கூறிய காரியங்களை செய்யாமல் நபி (ஸல்)அவர்கள் நோன்பு நோற்குமாறு கற்றுத் தந்துள்ளார்கள்

“ரமளான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1962

“ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம் 1977

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்தபோது ஆஷுரா தினத்தில் வேதக்காரர்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்போது வேதக்காரர்கள், இன்றைய தினம் மகத்துவமிக்கதாகும். அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களை காப்பாற்றி ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலில் மூழ்கடித்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக நபி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவர்களைவிட நாம்தான் மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறி ஆஷ{ரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோற்குமாறு கட்டளையிட்டார்கள் அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்: புஹாரி 3145

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்த போது எங்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நபி மூஸா(அலை) அவர்கள் வெற்றி பெற்ற தினமாக இருப்பதால்) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்தும் தினமாயிற்றே என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டில் முஹர்ரம் 9ம் நாளிலும் நோற்போம் என்று கூறினார்கள் அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத் 2087

ஆகவே, மேற்காணும் விஷயங்களை நன்கறிந்து புனிதமிக்க ஆஷுரா தினத்தைக் கண்ணியமாகக் கருதி முஹர்ரம் 9-10ல் நோன்பு நோற்று நன்மைகளை பெறுவோம். அது மட்டுமல்லாமல் தேவையில்லாத, மார்க்கம் காட்டித் தராத காரியங்களை செய்வதிலிருந்து நம்மையும், நம்
குடும்பத்தினர்களையும் பாதுகாத்துக் கொள்வோம்!\
நன்றி  லெப்பைக்குடிக்காடு TNTJ
 


Related Posts Plugin for WordPress, Blogger...