அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Saturday, December 11, 2010





அல்லாஹ்வின் திருபெயரால்
கடந்த 30  வருடங்களாக ஏகத்துவ பிரச்சாரத்தையும்
மனித நேய பணிகளையும் ஒருகிணைந்து
செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்
ஒரு அங்கமான கீழக்கரை கிளையின் சார்பாக
இஸ்லாத்தில் நுழைந்து இருக்கும் மூட நம்பிக்கைகளை
கரம் கொண்டு தடுக்கும் வேலையில் இறங்கியது
அதன் ஒரு பகுதியாக வாசலில் கருப்பு கயிறால் கட்டப்பட்டு இருக்கும்
சீனாகாரம் என்ற பொருளை அந்த வீட்டின் உரிமையாளர்க்கு சத்தியத்தை
எடுத்து சொல்லி அவர்களுக்கு விளக்கி அவர்கள் வீட்டிலேயே கத்தியை வாங்கி
அதை வெட்டி எடுத்து கடலில் வீசினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
அறியாமை காலத்து மூட நம்பிக்கைகளை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்
என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்களே அதே போல் இன்ஷா அல்லாஹ்
இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூட பழக்க வழக்கங்களை அல்லாஹ்வின் உதவி கொண்டு
கடலுக்குள் மூழ் கடிப்போம் இன்ஷா அல்லாஹ்

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் உதவியால்

 
சங்குவெட்டி  தெருவை சேர்ந்த
சகோதரி ஒருவர்  தனது மகளின் காது அறுவை சிகிச்சைக்காக
மருத்துவ உதவி கேட்டு  நம்மை நாடி இருந்தார்
அவருக்கு நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  500plot 
கிளை சார்பாக  ருபாய் 5000   மருத்துவஉதவி செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் உதவியால்

 
சின்னக்கடை தெருவை சேர்ந்த ஒரு
சகோதரி TP  நோயால் அவதிபட்டு
மருத்துவ செலவிற்காக நம்மை நாடி இருந்த
அவருக்கு நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  500plot 
கிளை சார்பாக  ருபாய் 2000 மருத்துவஉதவி செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Friday, December 10, 2010

ஜும் ஆ உரை

நமது மஸ்ஜித் தக்வாவில் ஜும்ஆ
அன்று சகோதரர் செய்யது ஜிப்ரீல் அவர்கள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்தால்
ஏற்படும் நன்மையை இரண்டு சகாபாக்களின்
வாழ்க்கை வரலாறோடு ஒப்பிட்டு பேசினார்கள்
கோடீஸ்வரர்களாய் வாழ்ந்த தோழர்கள் இறுதியில்
கபன் துணி கூட இல்லாமல் மரணித்ததை சுட்டிக்காட்டி
இஸ்லாம் இதயத்திற்குள் புகுந்தால் இவ்வுலக வாழ்வு
வெறும்  அற்பம் மானது என்று வாழ்ந்து காட்டிய
சகபாக்க்களை போல் நாமும் வாழ வேண்டும் என்றும்
முஹர்ரம் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய சுன்னத்தான
வழிமுறையும் காலில் போட்டு மிதிக்கவேண்டிய மூடநம்பிக்கைகளையும்
விளக்கமாக உரையாற்றினார்கள்

Wednesday, December 8, 2010

அன்பான வேண்டுகோள்

அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பார்ந்த சகோதரர்களே நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
500plot  கிளை மஸ்ஜித்தக்வா பள்ளி அல்லாஹ்வின் அருளால்
நல்ல முறையில் செயல்பட்டு வருவது தங்கள் அறிந்த ஒன்றே
நமது ஊரில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக
நமது பள்ளியில் ஜும்ஆ வுக்கு மின்சாரம் இல்லாமல் மிகவும்
சிரமமாக உள்ளது ஆகையால் பள்ளிக்கு UPS  ஒன்று வாங்க
முடிவு செய்து பொருளாதாரத்தை திரட்டும் வேலையில் ஈடு
பட்டு உள்ளோம் தாங்களும் தங்களுடைய பொருளாதாரத்தை
தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்

மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு


இன்ஷா அல்லாஹ் திருவாரூரில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு. இதில் பி.ஜே, அல்தாஃபி மற்றும் பலர் உரையாற்றுகின்றனர்.

Friday, December 3, 2010

பாபர் மஸ்ஜித்






வருகிறது டிசம்பர் 6 அதை மாற்ற காத்திருக்கிறது ஜனவரி27
உன்னை நாங்கள் மறவோம் உயிர்களை இழக்க நாங்கள் துணிவோம்
உன்னை நாங்கள் இழக்கமாட்டோம் எங்களை இழந்தேனும்  இறை இல்லத்தை மீட்போம்
இனி ஒரு பள்ளி அவர்கள் எண்ணத்தில் கூட நினைக்க விடமாட்டோம்
இடிகளாய் முழங்கி அவர்களின் இதயத்தை வெடிக்க செய்வோம்
அசத்தியவாதிகளின் அயோக்கியத்தனமான தீர்ப்பு உன்னை அபகரித்தாலும்
அல்லாஹ்வின் உதவி கொண்டு உன்னை நாங்கள் மீட்போம்
என முழங்கி அயோக்கியர்களும் ஆட்சியாளர்களும் அதிர
உச்ச நீதிமன்றமே உடனடியாக பாபர் மஸ்ஜிது வழக்கில் தலையிட்டு
நீதி வழங்கு என்று ஆர்ப்பரிக்க அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மதுரை மற்றும் சென்னையில்

ஜும் ஆ உரை

இன்று  03 /12 /2010   நமது TNTJ500plot மஸ்ஜிதுத்தக்வாவில்  
சகோதரர் பெரிய பட்டினம்
ஜின்னா அவர்கள் கியாமத் நாளை எப்படி நம்புவது என்ற  தலைப்பில்
கியாமத் நாளை நம்புவத்தின் பலனை அழகிய விளக்கி
ஜும்ஆ  உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்து லில்லாஹ்

மருத்துவ உதவி

கீழக்கரையில் மின்சாரம் தாக்கி பலியான சகோதரர்
(இன்னா லில்லாஹி வஇன்ன இலைன ராஜிஹூன் )
ஒருவரின் ஜனாசவை சென்னைக்கு எடுத்து செல்ல
TNTJ கிளைகள் சார்பாக ருபாய் மூவாயிரம் வழங்கப்பட்டது

Wednesday, December 1, 2010

இவரை சென்னையில் வைத்து காணவில்லை

மின் சார தடை நேரத்தில் மாற்றம் செய்ய கோரி

கீழக்கரையில் மின்சார தடை  நேரம்  மதியம் 12  மணி முதல்
                       
பிற்பகல்  2  மணி வரை என்று செய்தி தாள்களில் செய்தி வந்துள்ளது
                       
மாத மாதம் சுழற்ச்சி முறையில் இந்த நேர மாற்றம் வந்துள்ளது என்றாலும்
                      
முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையை புனித தினமாக அனுசரித்து அன்றைய
                      
தினத்தில் சிறப்பு தொழுகைக்கு செல்கிறார்கள் அந்த தொழுகைக்கான
                      
நேரம் சரியாகமதியம் 12  மணி முதல் பிற்பகல்  2 மணி வரையாகும்
                      
அந்த நேரத்தில் மின் சார தடை என்பது மிகவும் சிரமமாக இருக்கும்
                      
ஆகையால் மின் தடை நேரத்தில் மாற்றமோ அல்லது
                      
வெள்ளிக்கிழமைகளில் மட்டும்  மின் தடை நேரம் மாற்றமோ
                      
அல்லது அன்றைய தினத்தில் மட்டும் மின் தடை அல்லாமலோ
                      
இருக்க நடவடிக்கைஎடுக்கும்மாறு  உதவி பொறியாளர் அவர்களிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை  கிளைகள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது                                       
               


Monday, November 29, 2010

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


கீழக்கரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளை சார்பாக கடந்த 25-11-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...