அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Thursday, December 23, 2010

வெளிச்சம் * உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?.

அஸ்ஸலாமு அலைக்கும்,,,
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை நம் கைகளிலேயே தவழ்ந்து கொண்டிருக்கும் செல்போன்களின் தரத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?இதற்காக சர்வீஸ் இன்ஜினியர்கள் அல்லது நிபுணர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை. உங்கள் செல்போன்களின் தரத்தை நீங்களே எளிதாக சரிபார்க்கலாம். 
உங்கள் செல்போனில் *#06# என்று அழுத்தவும். உடனடியாக செல்போன் திரையில்15 இலக்கங்களில் IEMIஅடையாள எண்கள் தெரியவரும். அந்த எண்களில் 7மற்றும் 8வதாக உள்ள எண்களை கீழ்க்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து, உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
தற்போது, அதிகாரப்பூர்வமாக ஐ.எம்.இ.ஐ. இல்லாத செல்பேசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்பேசி கருவி அடையாள எண்) எண் இருக்கும்.. எனவே இந்த ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளை ஒருவர் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடியாது. திருடு போனாலும் கண்டுபிடிக்க இயலாது. உங்கள் செல்பேசியின் இதனை சாதகமாக்கி தீவிரவாதிகளும், குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் செல்பேசியின் IEMI ASஎண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் திருட்டு போய் விட்டால் காவல் துறையில் புகார் செய்து உங்கள் செல் எங்கிருந்தாலும் கண்டு பிடித்து விடலாம். (காவல் துறை ஒழுங்காக செயல் பட்டால்)  
·         7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால்: தரமான தொழிற்சாலையில் தயாரித்தது. அத்துடன் முழுக்க சோதிக்கப்பட்ட முதல் தரம் வாய்ந்தது.
·         7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால்: தரமான செல்போன். சோதிக்கப்பட்டது.
·         7 மற்றும் 8வது எண் 03அல்லது 30 என்றிருந்தால்: தரமான செல்போன். சோதிக்கப்பட்டது.
·         7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால்: தரம் சுமாராகத்தான் இருக்கும்.
·         7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால்: துபாயில் அசெம்பிள் செய்த செல்போன். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும்.
·         7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால்: தரம் குறைந்த பொருள். மின் இணைப்பு கொடுக்கும் போது (சார்ஜ் செய்யும் போது) வெடிக்க நேரிடும். அல்லாஹ் நாடினால் .

-- 
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71
 

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
22 /12 /2010  அன்று கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த
சகோதரர் ஒருவருக்கு நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
500plot  கிளை சார்பாக B பாசிடிவ் ரத்தம் ஒரு unit வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 21, 2010

வாரி வழங்கிய வள்ளல்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
வாரி வழங்கிய வள்ளல்கள்
கீழக்கரையில் முழு நேர ஏகத்துவ
பிரச்சாரத்திற்கு உதவி கொண்டிருக்கும்
TNTJ  டிவி சானலை  மேலும் மெருகூட்டவும்
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 27
பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்திற்கும்
தனது நகையை ஒரு சகோதரி வாரி வழங்கினார்கள்
அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்
நற்கூலியை வாரி வழங்க துவ ஆ செய்யுங்கள் இது போல்
நமது ஜமாஅத்தின் மீது நம்பிக்கை வைத்து வாரி வழங்கும்
மற்றும் வாரிவழங்க நினைக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
துவ ஆ செய்யுங்கள்

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  500plot கிளை
சார்பாக கீழக்கரை sn  தெருவை சேர்ந்த சகோதரர்
ஒருவருக்கு O நெகடிவ்  ரத்தம் ஒரு unit  வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, December 18, 2010

போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்துஜனவரி 4ல் அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, December 17, 2010

சிறு தொழில் உதவி

அல்லாஹ்வின் திருபெயரால்.....
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot
கிளை சார்பாக சாலை தெருவை சேர்ந்த சகோதரி
ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிசின்
வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

ஜும் ஆ உரை

அல்லாஹ்வின் திருபெயரால்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot
கிளை மஸ்ஜிது தக்வாவில் சகோதரர் இம்ரான் அவர்கள் ஜும்ஆ
உரையாற்றினார்கள்  மறைந்து போன மனித நேயம் என்ற தலைப்பில்
நம் சமுதாயம் மனித நேயத்தை தொலைத்துவிட்டு நிற்பதையும்
இஸ்லாம் எந்த அளவுக்கு மனித நேயத்தை வலியுறுத்துகிறது என்பதையும்
விளக்கினார்கள் தன் வீட்டு கல்யாணத்திற்காக சாலை போடுவதையும்
மாடமாளிகைகள் நிறைந்த இந்த ஊரில் தனது இயற்க்கை தேவையை
கழிப்பதற்கு பக்கத்து வீட்டுக்கு போகும் அவலத்தையும் அடிப்படை வசதி கூட
இல்லாத நம் சமுதாய மக்கள் இங்கே இருப்பதையும்  சுட்டி காட்டினார்கள்

Wednesday, December 15, 2010

கீழக்கரை கிளைகள் சார்பாக இந்த வருடம் காலண்டர் அடிக்கப்பட்டுள்ளது

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருபெயரால்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை
கிளைகள் சார்பாக சாயல்குடியை  சேர்ந்த
சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக
5000 ருபாய் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 14, 2010

இஸ்லாமிக் கல்லூரி

இன்ஷா அல்லாஹ் வரும் 07 /01 /2011
அன்று கீழக்கரையில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக " ஷர ஹுல் ஹிக்மா பெண்கள் தவ்ஹீத் கல்லூரி
தொடங்க இருக்கிறது அதற்க்கான மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது
இக் கல்லூரியில் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடம் ஆலிமா பயிற்சியும்
தாய்மார்களுக்காக ஆறுமாத பயிற்சியும் நடைபெற உள்ளது இது பற்றி  நகர்
TNTJ  செயலாளர்  சகோதரர் அஸ்கர் அலி கூறியதாவது இப்பயிற்சி போக
மேலும் ஆங்கில பேச்சு பயிற்சி  கம்ப்யுட்டர் அடிப்படை  பயிற்சி
பேச்சு திறன் பயிற்சி போன்ற முக்கியமான பயிற்சிகளும் வழங்கபடுவதாகவும்
இக் கல்லூரிக்கு வரும் மாணவியர்களுக்கு இலவச வாகன வசதியும்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இக்கல்லூரியை ஆய்ஷா பீவி தவ்ஹீத் மதரசாவில்
வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது கல்லூரியின் நிறுவனரும் மூத்த
தவ்ஹீத்வாதியுமான ஆய்ஷாஉம்மா அவர்கள் தனது சொந்த பொறுப்பில் நடத்த உள்ளார்கள்

மருத்துவ உதவி

நமது tntj500plot கிளை சார்பாக ராமநாதபுரத்தை
சேர்ந்த மாற்று மத சகோதரர் ஒருவருக்கு O +
ரத்தம் ஒரு unit வழங்கப்பட்டது

Saturday, December 11, 2010

ஆஷுரா தினம்

காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்"! (அல்குர்ஆன் 9:36)

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத் திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன.

நபி மூஸா(அலை) அவர்கள், அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிபெற்று கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட தினமான ஆஷுரா தினத்தை ஒரு சாரார் களங்கப்படுத்தி அதை துக்கமிக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

அலீ(ரலி) அவர்களை தூதராக ஏற்றுக் கொண்ட ஷியா கூட்டத்தினர், அலீ(ரலி) அவர்களின் மகனார் ஹூஸைன்(ரலி) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளில் கொல்லப்பட்டார்கள் என்றும், அதற்காக துக்கம் அனுஷ்டிப்பதாகக் கூறி நெஞ்சில் அடித்துக் கொள்வது, ஒப்பாரி வைப்பது, ஊர்வலம் நடத்துவது, தீக்குண்டத்தை வலம் வருவது என்பன போன்ற வீணான காரியங்களை இஸ்லாத்தின் பெயரால் செய்து வருகின்றனர்.இவ்வாறு செய்வது பெரிய பாவமாகும். அது மட்டுமின்றி, எந்த ஒரு முஸ்லிமும் இப்படிச் செய்யக்கூடாது.
இது போன்று செய்தால் அவன் முஸ்லிம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்... “கன்னத்தில் அடித்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துக்கொண்டு, அறியாமைக் காலத்து ஒப்பாரி வைப்பவன் என்னைச் சார்ந்தவனில்லை. அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1294, முஸ்லிம் 148, திர்மிதி 920, நஸயி 1827

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால்,துக்கம் என்ற பெயரில் மார்பில் அடித்துக் கொள்ளும் இந்த ஷியாக் கூட்டத்தினரின் செயலை சிலர் முஸ்லிம்கள் பெரிய சாதனையை செய்து விட்டதைப்போல் ரசிக்கின்றனர். அங்கே ஒன்று கூடுகின்றனர். ஆனால் இது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை யார் செய்தாலும் அதை தடுக்க வேண்டும். அதற்கு சக்தியில்லையென்றால் இஸ்லாத்திற்கே கேவலம் ஏற்படுத்தும் இவர்களின் காரியங்களை பார்த்து வேதனைப்பட்டு ஒதுங்கி விட வேண்டும்.

ஏனெனில்,
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...(கவலையின் போது) ஒப்பாரி வைப்பவனையும், தலையைமழித்துக் கொள்பவனையும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டு விலகிக் கொண்டேன் அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: முஸ்லிம் 149

இவர்கள்தான் இப்படியென்றால், தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் சிலரது காரியங்கள் இன்னும் படுமோசமாக இருக்கிறது. முஹர்ரம் பத்தாம் நாள் வந்த உடனேயே பஞ்சா எடுப்பது (ஐந்து விரல்களில் படும் அளவிற்கு மஞ்சளைக் கையால் தட்டி வீட்டுக் கதவுகளில் அப்புவது), ஹுஸைனார் பெயரில் மவ்லித் ஓதுவது, பத்தாம் நாளில் மட்டும் நோன்பு நோற்று யூதர்கள் வழியைப் பின்பற்றுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதுவெல்லாம் நபிகளாரின் வழிமுறைகளல்ல. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ ஸஹாபாக்கள் ஷஹீதானார்கள். ஸஹாபியப் பெண்கள் இறந்துள்ளார்கள். இவ்வளவு ஏன்? நபி(ஸல்) அவர்களுடைய பாசத்துக்குரிய மனைவி கதீஜா(ரலி) அவர்களும் இறந்துள்ளார்கள். இதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்தார்களா? நெஞ்சில் அடித்துக் கொண்டார்களா? சட்டையைக் கிழித்துக் கொண்டார்களா? தீக்குண்டத்தை சுற்றி வந்தார்களா? மொட்டையடித்துக் கொண்டார்களா? ஹுஸைனார் மவ்லித் ஒதினார்களா? இல்லவே இல்லை. நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டாத தடுத்துள்ள இந்த அனாச்சாரங்களை நாம் ஏன் செய்ய வேண்டும். இதனால் நன்மை கிடைக்குமென்றா? இல்லையே!. இது போன்ற காரியங்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள் என்றே நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புதிய அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் (தள்ளி) விடும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயி 1560

மேலும் ஆஷுரா தினம் என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி சிறப்பு தினமாக கருதப்பட்டு வந்தது என்பதையும் விளங்க வேண்டும். ஏனெனில் சிறப்பு என்று எண்ணி நம் சமுதாயத்தினர் தவறான காரியங்களை செய்து வருகின்றனர்.முஹர்ரம் பத்தில் மேற்கூறிய காரியங்களை செய்யாமல் நபி (ஸல்)அவர்கள் நோன்பு நோற்குமாறு கற்றுத் தந்துள்ளார்கள்

“ரமளான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1962

“ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம் 1977

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்தபோது ஆஷுரா தினத்தில் வேதக்காரர்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்போது வேதக்காரர்கள், இன்றைய தினம் மகத்துவமிக்கதாகும். அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களை காப்பாற்றி ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலில் மூழ்கடித்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக நபி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவர்களைவிட நாம்தான் மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறி ஆஷ{ரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோற்குமாறு கட்டளையிட்டார்கள் அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்: புஹாரி 3145

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்த போது எங்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நபி மூஸா(அலை) அவர்கள் வெற்றி பெற்ற தினமாக இருப்பதால்) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்தும் தினமாயிற்றே என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டில் முஹர்ரம் 9ம் நாளிலும் நோற்போம் என்று கூறினார்கள் அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத் 2087

ஆகவே, மேற்காணும் விஷயங்களை நன்கறிந்து புனிதமிக்க ஆஷுரா தினத்தைக் கண்ணியமாகக் கருதி முஹர்ரம் 9-10ல் நோன்பு நோற்று நன்மைகளை பெறுவோம். அது மட்டுமல்லாமல் தேவையில்லாத, மார்க்கம் காட்டித் தராத காரியங்களை செய்வதிலிருந்து நம்மையும், நம்
குடும்பத்தினர்களையும் பாதுகாத்துக் கொள்வோம்!\
நன்றி  லெப்பைக்குடிக்காடு TNTJ
 


Related Posts Plugin for WordPress, Blogger...