அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Monday, August 22, 2011

காணவில்லை


அஸ்ஸலாமு அலைக்கும் முதலில் இருப்பவர்
 பெயர் ஆய்சத் மக்ரிபா
வயது   35
காணாமல் போன அன்று நீலக்கலர் வாயில் புடவை அணிந்து இருந்தார் 
கொஞ்சம் மனநிலை பாதிக்க பட்டவர்
இரண்டாவது போடாவில் இருப்பவர் \
பெயர் சார உம்மால்
வயது   42
காணாமல் போன அன்று ரோஸ் கலர்  புடவை அணிந்து இருந்தார்
கொஞ்சம் மனநிலை பாதிக்க பட்டவர்
இருவரும் கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்தவர்கள்
இவர்களை கண்டாள் கீழக்கரை 500 பிளாட் கிளையை தொடர்பு கொள்ளவும்


இருவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் 
ஏழை குடும்பம்

Sunday, August 14, 2011

பாலிசி க்கு பணம் கட்டும் ஜவாஹிருல்லாஹ்

மாதா மாதம் பாலிசி க்கு பணம் கட்டும் ஜவாஹிருல்லாஹ்

புதிய நிர்வாகம



அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500plot
கிளைக்கு 7 /06 /11 அன்று புதிய நிர்வாகம் மாவட்ட செயலாளர் அனீஸ் ரஹ்மான்
மற்றும் துணை செயலாளர் நரிப்பையூர் சுலைமான் முன்னிலையில் தேர்ந்தெடுக்கபட்டது
தலைவர் சகோதரர் சுல்தான்
செயலாளர் சகோதரர் அபுதாகிர்
பொருளாளர்  சகோதரர் அமீர் அப்பாஸ்
துணை தலைவர் சகோதரர் காதறியா யாசர்
துணை செயலாளர் பாஹிம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக
தேர்ந்து எடுக்கப்பட்டனர் இந்நிகழ்ச்சியில்
மாவட்ட தாயீ சகோதரர் செய்து ஜிப்ரீல் பொறுப்புகள் அமானிதம் என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்
செய்தி : அனீஸ் ரஹ்மான் மாவட்ட செயலாளர்

சீருடை வழங்கப்பட்டது


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500plot கிளை சார்பாக 24 /06 அன்று
கீழக்கரை பெத்திரி தெருவை சேர்ந்த சகோதரரின் குழந்தைகளுக்கு
ருபாய் 1800 மதிப்புள்ள சீருடை வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500plot கிளை சார்பாக
13 / 06 அன்று தேனீ மாவட்டத்தை சிறந்த சகோதரர் ஒருவருக்கு ECE
படிக்க ருபாய் 4000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் மேலும் அவரது
மூன்றாண்டு படிப்புக்கும் பொறுப்பேற்று கொண்டது 

அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500plot கிளை சார்பாக
14 / 06 அன்று தேவிபட்டினத்தை சேர்ந்த சகோதரி  ஒருவருக்கு Bsc
படிக்க ருபாய் 3000கல்வி உதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500plot கிளை சார்பாக
14 / 06 அன்று சக்கர கோட்டையை சேர்ந்த சகோதரி  ஒருவருக்கு ECE
- Hide quoted text -
படிக்க ருபாய் 2000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

 
அல்லாஹ்வின் திருப்பெயால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500 பிளாட் கிளை
சார்பாக் ஏர்வாடியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு ருபாய்
1000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


அல்லாஹ்வின் திருப்பெயால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500 பிளாட் கிளை
சார்பாக் 25/06 அன்று   பனக்குளத்தை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு ருபாய்
500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500 பிளாட் கிளை சார்பாக
28/௦௬ அன்று 500 பிளாட் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது
இதில் சகோதரர் அரசத் அலி அவர்கள் சத்தியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
- அல்ஹம்துலில்லாஹ்

மார்க்க சொற்பொழிவு


அல்லாஹ்வின் திருப்பெயரால்
கீழக்கரை 500 பிளாட் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை
சார்பாக மஸ்ஜித் தக்வாவில் 26 /06 அன்று மார்க்க சொற்பொழிவு நடந்ததது
இதில் சகோதரி ஹன்சியா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ் 


அல்லாஹ்வின் திருப்பெயரால்
கீழக்கரை 500 பிளாட் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை
சார்பாக மஸ்ஜித் தக்வாவில் 03 /07அன்று மார்க்க சொற்பொழிவு நடந்ததது
இதில் கிளை செயலாளர்  சகோதரர் அபுதாகிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ் 


அல்லாஹ்வின் திருப்பெயரால்
கீழக்கரை 500 பிளாட் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை
சார்பாக 500 plot பகுதியில்  05 /07அன்று மார்க்க சொற்பொழிவு நடந்ததது
இதில் சகோதரர் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ் 



Saturday, August 6, 2011

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் அறிவிப்பு

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் அறிவிப்பு
மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளது

Monday, August 1, 2011

கண்டன ஆர்பாட்டம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளைகள் சார்பாக தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 500 பிளாட் கவுன்சிலர் ஆகியோரை கண்டித்து கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே
கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில்  500 பிளாட் மற்றும் அதன் சற்று பகுதிகளை கீழக்கரை நகராட்சியுடன் இணைக்க கோரியும் குடிநீர் சாலை சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள்
செய்து கேட்டும் பொறுப்பு ஏற்ற நாள் முதல் இப்பகுதிகளை புறக்கணித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் ஹமீது கண்டன உரையாற்றினார் இப்போராட்டத்தில் 300..
மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்
 
செய்தி : 500plot செயலாளர் அபுதாகிர்

Friday, April 29, 2011

கீழக்கரை நகர்


அல்லாஹ்வின் திருபெயரால்...
அஸ்ஸலாமு அழைக்கும்,
கீழக்கரை நகர் கிளை சார்பாக 23 - 4 - 2011 அன்று பழைய குத்பா பள்ளிதெருவை சார்ந்த சகோதரி. செய்யது பாத்திமா நாச்சியார் அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4500 கீழக்கரை நகர் தலைவர் சகோ. பசல் முஹம்மது அவர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 இப்படிக்கு,
நகர் செயலாளர்,
அஸ்கர் அலி,
9944519768
கீழக்கரை.

Tuesday, April 26, 2011

அதிகாரிகளின் மெத்தனம்

பாரம்பரியம் பலவருட அனுபவம்
மனிதர்கள் நோயாளிகளாய் மாற்றும்
கொசுக்களின் தாயகம்
அதிகாரிகளின் மெத்தனம்
ஓட்டு வாங்கியவரும் காணவில்லை
என்று தீரும் இந்த
அத்தியிலை தெருவின் இழி நிலை 
முடிவு கிடைக்கும் ஓயமாட்டோம் TNTJ 












பெறுநர்,              திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
                   மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 
                   இராமநாதபுரம் மாவட்டம்


பொருள்,              நீண்ட காலமாக சரி செய்யபடாமல் இருக்கும்
                     கழிவு நீர் கால்வாய்களை சரி செய்ய உத்தரவிட கோரி



சொற்பொழிவு

நமது TNTJ500PLOT  கிளை மஸ்ஜித் தக்வாவில்
24 /04 /2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில்
சகோதரர் ஜிப்ரீல் அவர்கள் மறுமை வெற்றி
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் இதில் ஏராளமான
பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர் 

ஜூம் ஆ உரை

அல்லாஹ்வின் திரு பெயரால் நமது TNTJ500PLOt கிளை மஸ்ஜித் தக்வாவில்
22 /04  வெள்ளி அன்று சகோதரர் சேலம் மொய்னுதீன் ஜூம் ஆ  உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, April 17, 2011

நன்றி உரை

நமது TNTJ500PLOT  கிளை மஸ்ஜித் தக்வாவில்
17 /04 /2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு
TNTJ வின் தேர்தல் நிலைபாட்டை ஏற்று 
தி மு க கூட்டணிகளுக்கு வாக்களித்த அனைவருக்கும்
கீழக்கரை கிளைகள் ஒருங்கிணைப்பாளர் சகோதரர்
ஹாஜா அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்
தேர்தல் உறவு தேர்தலுடன் முடிந்தது என்ற
கருத்தை மக்கள் மத்தியில் தெளிவு பட கூறினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர சொற்பொழிவு


நமது TNTJ500PLOT  கிளை மஸ்ஜித் தக்வாவில்
17 /04 /2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில்
சகோதரர் ஜிப்ரீல் அவர்கள் இம்மை வாழ்வும் மறுமை வெற்றியும்
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் இதில் ஏராளமான
பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர் 

Friday, April 15, 2011

வெள்ளி மேடை

நமது TNTJ500PLOT கிளை மஸ்ஜித் தக்வாவில் 15/04 வெள்ளி மேடையில் சகோதரர் சிவகாசி 
சுல்தான் அவர்கள் மறுமையில் பாரமாகும் இம்மை செயல்கள்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, April 13, 2011

விஷமங்களும் தக்க பதில்களும்


  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? இஸ்லாம் அமைதியையும் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற பின்பற்றுகின்ற மார்க்கமாகும். எனவே இஸ்லாமானது தீவிரவாதத்தை ஆதரிப்பதுமில்லை அவற்றை ஊக்கப்படுத்துவதுமில்லை.

இறைவன் தன் திருமறையிலே கூறுகின்றான்:
(விசுவாசிகளே!) மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் எதிர்த்துப் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்கள் அத்தகையோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள்பால் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை: நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்வோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன், 60-8).

முஹம்மது (ஸல்) அவர்கள் போரின் போது போர் வீரர்கள், பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்வதைத் தடை செய்திருந்தார்கள். நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள், வரம்பு மீறி நடக்காதீர்கள், பிறந்த குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்றும் அறிவுரை கூறி இருக்கின்றார்கள். மேலும், முஸ்லிம்களாகிய உங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளவனை நீங்கள் கொலை செய்தீர்களானால், சொர்க்கத்தின் வாடையைக் கூட உங்களால் நுகர்ந்து பார்க்க முடியாது, அந்த சொர்க்கத்தின் சுகந்தமானது நாற்பது ஆண்டுகள் மணம் வீசக் கூடியது என்றும் அறிவுரை கூறியுள்ளார்கள்.
நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா

நெருப்பிலிட்டு ஒருவனுக்கு தண்டனை வழங்குவதையும் முஹம்மது (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (நூல்: அபூதாவூத் - ஹதீஸ் எண் : 2675).

ஒரு முறை அவர்கள், ஒரு மனிதரைக் கொலை செய்வதை இரண்டாவது வகைப் பெரும்பாவங்களில் முதன்மையானது எனக்கூறி மறுமைக்குப் பின் உள்ள நியாயத் தீர்ப்பு நாளைப் பயந்து கொள்ளுமாறும், அன்றைய தினம் முதல் விசாரணையாக இரண்டு நபர்களுக்கிமடயே இரத்தம் சிந்தியது சம்பந்தப்பட்ட வழக்குகள் தான் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : முஸ்லிம் ஹதீஸ் எண் : 1678, மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 6533).

விலங்கினங்களைக் கூட இரக்கமுடன் நடத்துமாறும், அவைகளைச் சித்திரவதை செய்வதினின்றும் தவிர்த்துக் கொள்ளுமாறும், மக்களை முஹம்மது (ஸல்) அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளார்கள். ஒரு பெண்மணி ஒரு பூனையைக் கட்டிப்போட்டு உணவேதும் கொடுக்காமல் அந்தப் பூனையைச் சாகடித்த குற்றத்திற்காக அவள் நரகத்தில் போடப்பட்டாள். ஏனெனில் அவள் அந்தப் பூனைக்கு உணவோ, நீரோ எதையும் கொடுக்கவும் இல்லை, தானாகச் சென்று பூமியில் ஊர்ந்து திரியும் பூச்சிகளைக் கூட தன்னுடைய இரையாக தேடிக் கொள்ள அவள் அனுமதிக்கவும் இல்லை, அந்தக் குற்றத்திற்காக அவள் நரகத்தை அடைந்தாள். (நூல்கள் : முஸ்லிம் ஹதீஸ் எண் : 2422, மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 2365).

ஒரு தாகமுள்ள நாய்க்கு ஒருவன் தண்ணீர் அருந்தக் கொடுத்த காரணத்தால், அவன் சொர்க்கத்தை அடைந்தான். அப்பொழுது முஹம்மது (ஸல்) அவர்களது தோழர்கள் கேட்டார்கள், விலங்கினங்களிடம் இரக்கம் காட்டினாலுமா நாம் சொர்க்கத்திற்குச் செல்வோம் எனக் கேட்டார்கள். உயிருள்ளவற்றிலும், மனிதர்களிடத்திலும் இரக்கம் காட்டுவதால், அதற்கான நற்கூலி இருக்கின்றது, என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : முஸ்லிம் ஹதீஸ் எண் : 2244, மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 2466).

திருமறைக் குர்ஆன் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழிகளின்படியும், நிராயுதபாணிகளானவர்களின் இதயங்களைத் திடுக்கிடச் செய்யும் அளவுக்கு அவர்களைப் பயத்தில் ஆழ்த்துவதும், பொதுமக்களின் குடியிருப்புக்கள், சொத்துக்களை அழிப்பதும், ஒன்றுமே அறியாத பெண்களையும்., குழந்தைகளையும் கண்ணி வெடிகொண்டும், ஏவுகணைகள் கொண்டும் தாக்கி அழிப்பதும் (இத்தகைய நாசகார ஆயுதங்கள் யாவும் இன்று நவீன உத்திகளுடன் ஐரோப்பியர்களாலும், அமெரிக்கர்களாலும், இஸ்ரேலியர்களாலும் தான் கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்றுமறியா மக்களின் மீது அவற்றை வீசி அவர்களை அழித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த ஆயுதங்கள் யாவும் முஸ்லிம்களின் கண்டுபிடிப்புகள் அல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம். இவ்வளவு நாசகார ஆயுதங்களை வைத்துக் கொண்டு இன்று முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்) இஸ்லாத்தினால் தடை செய்யப்பட்டதாகும்.

முஸ்லிம்கள் யாவரும் அன்பையும், சாந்தியையும், சமாதானத்தையும், கருணையையும், மன்னித்தலையும் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மதத்தை அல்லது மார்க்கத்தைப் பின்பற்றி வருபவர்கள், இன்று ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.

தனிப்பட்ட வகையில் ஒரு முஸ்லிம் தீவிரவாதத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்வாரேயானால், அவர் இஸ்லாத்தின் பார்வையில், இஸ்லாமியச் சட்டங்களைப் புறந்தள்ளிய குற்றத்திற்கும், அதை மீறிய குற்றத்திற்கும் ஆளான குற்றவாளியாவார். 

Monday, April 11, 2011

வாராந்திர சொற்பொழிவில்

நமது TNTJ 500plot  கிளை மஸ்ஜித் தக்வாவில் 10 /04 /2011  அன்று 
வாராந்திர சொற்பொழிவில் சகோதரி ஹன்சியா அவர்கள் 
தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

வெள்ளிமேடை

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
08/04 /2011  அன்று வெள்ளிமேடையில் சகோதரர்
கானத்தூர் பஷீர்     அவர்கள் பிரார்த்தனை
  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
அல்ஹம்துலில்லாஹ் 

Friday, April 8, 2011

கொட்டு அடித்து ஓட்டு கேட்கும் கோமாளிகள்

கொட்டு அடித்து ஓட்டு கேட்கும் கோமாளிகள்
மானத்தை அடகு வைத்த மானம் கெட்ட
 மானம் காத்த ம ம க ஜவாஹிருல்லாஹ்
மற்றும்  இந்திய தருதலைகள் ஜமாஅத்
அடிவருடிகளும்  பேன்டு வாத்திய இசையுடன்
ஓட்டு கேட்கும் காட்சி  கீழக்கரை 07/04/2011

Wednesday, April 6, 2011

இசை ஹராமா


இசை ஹராமா

இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசைமட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ்ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்?
ரிபாஸ் கத்தார்
பதில்
இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம்பட்டுமது,  இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.

* வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்






ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!


தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.

அரபு நாடு என்றவுடன் அங்கு...


Related Posts Plugin for WordPress, Blogger...